Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 3, 2019

ஆசிரியர்களுக்கு கட்டாய ஒய்வு

உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமான ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க அம் மாநிலஅரசு முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் இருந்து கடந்த 2000-வது ஆண்டில் பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். பாஜக ஆளும் மாநிலமான இது இமயமலையின் சரிவுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் கடுவால் மற்றும் குமாவ்ன் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாண வர்கள் தேர்ச்சி எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாக பாடங்களை போதிக் காததே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.



மேலும் பல ஆசிரியர்கள் முன்கூட்டியே அனு மதி பெறாமல் விடுப்பு எடுப்பதால் மாற்று ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்த முடியாத நிலை உள்ளதாகவும் புகார் உள்ளது.எனவே, இந்த நிலையை மாற்ற உத்தராகண்ட் மாநில பள்ளிக் கல்வித் துறை ஒரு முடிவு எடுத் துள்ளது. இதன்படி, மாணவர் களின் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமானவர்கள் மற்றும் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும். இது 50 வயது நிறை வடைந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும்.



இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப் பப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் குறையக் காரணமான ஆசிரியர் களை அடையாளம் கண்டு, வரும் 20-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்பு மாறு அதில் கோரப்பட்டுள்ளது.இதனிடையே, குமாவ்ன் பகுதி யில் பல மாதங்களாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் உள்ள 26 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



உத்தராகண்டில் மொத்தம் 65,000 ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். உத்தரா கண்ட் அரசின் இந்த புதிய முடிவை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு பள்ளி ஆசிரியர் சங்கங் கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.