கல்வித்துறை கமிஷனர் அதிகாரங்கள் என்ன? அரசாணை வெளியீடு.


பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனருக்கு அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான அதிகாரங்களை வரையறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி கமிஷனராக இருப்பவர் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் தொடக்கக் கல்வி இயக்குனரகம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அரசு தேர்வு இயக்குனரகம் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார்.
பள்ளிகளில் ஆய்வு நடத்தி பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வார். அரசு வழிகாட்டி விதிமுறைகளை செயல்படுத்துவார். திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவார். அவ்வப்போது அரசு அளிக்கும் உத்தரவின்படி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.