ஊரக திறனாய்வு தேர்வு விடை குறிப்பு வெளியீடு


சென்னை: அரசு தேர்வுத் துறை நடத்திய ஊரக திறனாய்வு தேர்வின் விடை குறிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான, தமிழக ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 29ல் நடந்தது. இதற்கான, தற்காலிக விடை குறிப்பு, அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின், https://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, இந்த விடைக்குறிப்பு தொடர்பாக சந்தேகங்கள் மற்றும், மாற்று கருத்துக்கள் இருந்தால், அதை நாளைக்குள் directordge.tn@nic.in என்ற, இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.