காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

01.01.2019 அன்றைய நிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிமைவிடல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.01.2003 முதல் 31.05.2006 வரை உள்ள பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பெயர்பட்டியல் 2013 ம் ஆண்டில் விடுப்பட்டவர்கள் மற்றும் 2014 ம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியலும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
HSS HM Panel List - Download here...