Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 24, 2019

செல்போன் தொலைந்துபோனால் இனி கவலையில்லை... நீங்களே கண்டுபிடிக்க வந்துடுச்சு ஆப்


செல்போன்கள் திருடு போனால் அதனை கண்டுபிடிப்பதற்காக இனி IMEI நம்பரையோ, போலிஸையோ நாடாமல் நாமே கண்டுபிடிக்கும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




Lockwatch - Theif Catcher என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து ஜி-மெயில் ஐடியுடன் இணைத்துவிட்டால் போதும். செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ எளிதில் கண்டுபிடித்து விடலாம்.




திருடிய செல்போனை எவரேனும் இயக்க நினைக்கும்போது ஸ்கிரீன் பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்டை தவறாக கொடுத்துவிட்டால் அந்த போனில் இருந்து யார் செல்போனை இயக்குகிறார்களோ அவர்களை புகைப்படம் எடுத்து, செல்போன் இயக்கும் நபர் இருக்கும் இடத்தையும் லாக் வாட்ச் ஆப் மெயில் செய்துவிடும்.
அந்த லொகேஷனை வைத்து செல்போன் இருக்கும் இடத்தை எளிதில் கண்டறிந்துவிடலாம்.
மேலும், ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்தாலும் மெயில் அனுப்பப்படும். அதேபோல், தொலைந்து போன செல்போனில் வேறு சிம் கார்டு பொறுத்தினாலும் மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது.




பாஸ்வேர்டை தவறாக கொடுத்தாலும் நிறைய போட்டோக்கள் எடுக்கும் வசதியும் ரெக்கார்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி லாக் வாட்ச் செயலியின் ப்ரீமியம் அம்சத்தில் மட்டுமே உள்ளது. தவறான பாஸ்வேர்டை போட்டதும் 10 நொடிகள் கழித்தே மெயிலுக்கு தகவல் அனுப்பப்படும். போன் உரிமையாளரே பாஸ்வேர்டை தவறாக போட வாய்ப்புள்ளது என்பதால் இந்த வசதி. இயக்குபவரின் போட்டோ எடுப்பது செல்போன் வைத்திருக்கும் நபருக்கு தெரியாமலேயே இருக்கும் எனவும் ப்ளே ஸ்டோரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த லாக் வாட்ச் ஆப் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் மட்டுமே தற்போதைக்கு செயல்படும்.