Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 4, 2019

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவு: தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க ஆதிதிராவிடர் நலத் துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் க.வீ.முரளீதரன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் 1,096 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.



கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிசமான பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டம் நவம்பர் 7-ஆம் தேதி இயக்குநர் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தலைமையாசிரியர்கள் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.