Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 10, 2019

அனைத்து வகையான காய்ச்சல், சீரான மாத விலக்கு, அடிவயிற்று வலி, தோல்நோய் முதலான நோய்களைப் போக்கும் கோரை கிழங்கு


பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. மாதவிலக்கை தூண்டக் கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை தருகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது. வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.


கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும். முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது.


வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. உடல் வலியை போக்கும். காய வைத்த கோரை கிழங்கு, பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.