Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 28, 2019

விரிவுரையாளர், கல்வி அதிகாரி பதவிகளுக்கு தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


பாலிடெக்னிக் விரிவுரையாளர் மற்றும் வட்டார கல்வி அதிகாரி பதவியை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:




பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, பி.இ.ஓ., எனப்படும், வட்டார கல்விஅதிகாரி பணியிடங்களை நிரப்ப, ஆன்லைன் கணினி தேர்வு, விரைவில் நடத்தப்பட உள்ளது. அதேபோல, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,060 விரிவுரையாளர் பணி இடங்களையும் நிரப்ப, விரைவில் ஆன்லைன் கணினி வழி தேர்வுமற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.இந்த இரண்டு தேர்வுகளும் நடத்தப்படும் தேதி, விண்ணப்ப பதிவு துவங்கும் தேதி, பதிவு முடியும் தேதி ஆகியன, விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.



அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன், தேர்வுக்கான தேதியைக்கூட முடிவு செய்யாமல் இந்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.இரண்டாம் தேர்வு: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டி தேர்வு, 2017, செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள், சில மாதங்களில் வெளியாகின. அப்போது, 200க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இறுதி பட்டியல் வெளியானது.




இந்த முறைகேடு விவகாரம், பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. அதனால், இந்த தேர்வின் முடிவுகளும், அதற்கான நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.