செவிலியர் பணியில் சேர வாய்ப்பு


சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில், 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை, இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.இதற்கு, www.mrb.tn.gov.in என்ற, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்ப வினியோகம் கிடையாது. இந்த பணியிடத்திற்கு, வரும், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில், கிராம சுகாதார செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.