அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குடை...இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கப்பட்டது.
மழை மற்றும் வெயிலில் இருந்து மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நரசிங்கக்கூட்டம் பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கப்பட்டது.

வேம்பார் செ.அந்தோனி ராஜ் அவர்கள் ₹3500 மதிப்புள்ள 25 குடைகளை மாணவர்களுக்காக வாங்கிக் கொடுத்துள்ளார். இதனை தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் மற்றும் இடைநிலை ஆசிரியர் பொ.அய்யப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.