தலைகுனிந்து படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி


திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து குழந்தைகள் தின விழா , தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். புத்தூர் கிளை நூலகம் நூலகர் தேவகி, வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
பள்ளியில் ஏழாம் முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு
தலை குனிந்து படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் தலைப்பிலும் , ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீ விரும்பும் நூல் தலைப்பிலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவுச் சுரங்கம் தலைப்பிலும் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. சிறந்த தமிழ் மொழி உச்சரிப்பு , கருத்து, உடல் மொழி ஆகியவற்றினை கொண்டு சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு நூலக வார நிறைவு விழாவில் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும்.