Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 29, 2019

நூலகத்துறையில் செய்யப் படவேண்டிய மறுசீரமைப்பு - கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர்

 தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொதுநூலககத்துறையில் 1. மாநில மைய நூலகம்-2, (கன்னிமரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்) 2. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என்ற விகிதத்தில் மாவட்ட மைய நூலகங்கள்-32, (புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களிலும் மாவட்ட மைய நூலகம் உருவாக்கப்படவில்லை ). 3. கிளை நூலகங்கள்-1975, 4. ஊர்புற நூலகங்கள்-1914, 5. பகுதி நேர நூலகங்கள்-539 (தொடக்கப்பணியில் பல புதிய நூலகங்களும் உள்ளன), 6. நடமாடும் நூலகங்கள்- 10. உள்ளன. 2013 ஆண்டுவரை மட்டுமே சென்னை தவிர 31 மாவட்டங்களில் உள்ள பகுதி நேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாகவும், ஊர்ப்புற நூலகங்களை கிளைநூலகங்களாவும் தரம் உயர்த்தப்பட்டன. கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நூலகங்களில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நூலகர்கள் பணியிடங்களை உருவாக்கப்படவில்லை. 2010 ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்ட 77 வருவாய் கோட்ட முதல் நிலை நூலகங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. 16 மாவட்டங்களில் மாவட்ட நூலக அலுவலர், ஆய்வாளர் மற்றும் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பணியிடங்கள் இதுவரை கிடையாது. (விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் கிடையாது) .நூலகத்துறையில் மட்டுமே SSLC மட்டுமே கல்விதகுதியுடன் வரும் இளநிலை உதவியாளர்க்கு ரூ. 2400 தர ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் +12,CLIS கல்வித் தகுதியுடன் வரும் மூன்றாம் நிலை நூலகர்களுக்கு ரூ. 2000 தர ஊதியம் வழங்கபடுகிறது. கிட்டதட்ட 400 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு கிடையாது. அரசு ஊழியர்களாக பணிபுரியும் மூன்றாம் நிலை நூலகர்களுக்கு 1.அரசுநிதி, 2.அரசுநிதி(திரும்ப செலுத்துதல்) மற்றும் 3.சில்லரை செலவீனம் மூன்று விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. அதிலும் சில்லரை செலவீனம் மூலம் ஊதியம் பெறும் நூலகர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் பங்களிப்பு ஓய்வூதியம், NHIS மருத்துவ காப்பீடு, குடும்ப சேமநலநிதி, போன்ற அத்தியாவசிய பணி பலன்கள் கிடையாது. சென்னை மாவட்டத்தில் ஊட்டு பணியிடமான ஊர்ப்புற நூலகர்கள் பணியிடம் இல்லாததால் மூன்றாம் நிலை நூலகர்கள் வெளிமாவட்ட சார்ந்தவர்கள் பதவி உயர்வின் மூலம் பணி புரிந்து வருகிறார்கள். சென்னையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்றாம் நிலை நூலகர் பணியமர்வு கிடையாது. 16 மாவட்ட நூலக அலுவலங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட மாவட்ட நூலக அலுவலர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். பதவி உயர்வு மூலமோ அல்லது TNPSC மூலம் நேரடியாகவோ மாவட்ட நூலக அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. 25 மாவட்டங்களில் முதல் நிலை நூலகர்கள் மாவட்ட நூலக அலுவலர் பதவியை கூடுதல் பொறுப்பின் மூலம் நிர்வாகிக்கிறார்கள். இதற்கெல்லாம் முத்தாப்பாக நூலகத்துறை நிர்வாகம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு துறை சார்ந்த தனி இயக்குநர் பணியிடம் என பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண்(டி1) 444. வெளியிட்ட நிலையில் இணை இயக்குநர், துணை இயக்குநர் போன்ற பல அதிமுக்கியமான பணியிடங்கள் பல பள்ளிக்கல்வித் துறை சார்பில் கூடுதல் பொறுப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது. நூலகத்துறை மறுசீரமைப்பு செய்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் நோக்கி நகர முடியும். உங்கள் நண்பன் கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர் தமிழ்நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம் சி&டி பிரிவு