அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் வேலை


அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பணிமனை உதவியாளர் - பண்டக உதவியாளர்
காலியிடங்கள்: 10

பணி: சமையலர் - உதவி சமையலர்
காலியிடங்கள்: 02

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை.

விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளளது பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 98மேலும் விவரங்களுக்கு http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.11.2019