Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 10, 2019

பெயர், பாலினம் திருத்தத்துக்காக ஆதார் விதிகளில் மாற்றம்

ஆதார் விதிகளில் தனிநபர் பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திருத்தம் செய்துள்ளது.
இதன்மூலம், பெயர், பாலினம், பிறந்த நாள் ஆகியவற்றில் ஒரு சில முறை மட்டுமே திருத்தங்களை செய்ய முடியும்.
பிறந்த தேதியை ஒரே ஒரு முறை மட்டுமே ஆதார் அட்டையில் திருத்த முடியும் என்று ஏற்கெனவே யுஐடிஏஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆதார் அட்டையில் இனி பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்ற இயலும். பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்ற இயலும். ஆதார் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளும்போது பிறந்த தேதிக்குச் சான்றாக உரிய ஆவணம் இல்லாவிட்டால் தோராயமாக பிறந்த தேதி பதிவு செய்துகொள்ளப்படும்.


பின்னர், உரிய ஆவணங்களுடன் தனி நபர்கள் தங்களது பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளலாம். இதேபோல் பாலினத்தை ஒரே ஒரு முறை திருத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஆதார் அட்டையில் திருத்தங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய யுஐடிஏஐ அலுவலகத்தை அணுக வேண்டும் என்று யுஐடிஏஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.