விளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை


கிழக்கு இரயில்வேத் துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தடகள வீரர்கள், கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பிரிவில் சாதனை படைத்த ஆண், பெண் இருபாலினத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கிழக்கு இரயில்வே

பணி : 21கல்வித் தகுதி : ஐடிஐ முடித்தவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் தொடர்புடையத் துறைக்கு விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுத் தகுதி : வில்வித்தை, கூடைப்பந்து, கபடி, தடகளம், செஸ், சைக்ளிங், கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்திருக்க வேண்டும். (முழு விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.rrcer.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ.250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rrcer.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.