Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 27, 2019

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி


ஆசிரியர்களுக்கு பின்லாந்து நிபுணர்கள் பயிற்சி




அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து நாட்டின் நிபுணர்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே புதிய பாட திட்டம், தேர்வு முறையில் மாற்றம் போன்றவை அமலுக்கு வந்துள்ளன. புதிய பாட திட்டத்தின் படி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டமும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துவக்கம்இந்த வரிசையில், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் திறன்களை மையப்படுத்தி, கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பின்லாந்து நாட்டில் இருந்து, நான்கு பேர் குழுவினர், சென்னைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர்.




பின்லாந்து குழுவினரின் சிறப்பு பயிற்சி வகுப்பு, பள்ளி கல்வி இயக்குனரகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வழியாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை படிப்படியாக, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஆலோசனைதமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.




அந்த பதவியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப் பட்டுள்ளார்.கடந்த வாரம் பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பேற்ற நிலையில், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டம், அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.மேலும், பள்ளி கல்வி துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பள்ளி கல்வியின் தர மேம்பாடு, புதிய பாட திட்ட பயிற்சி, பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது, மத்திய - மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது.