ஆய்வக டெக்னீசியன் வேலை வேண்டுமா?


மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 1432 Lab Technician Grade III பணிக்காலியிடங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவுசெய்துள்ள தகுதிவாய்ந்த பதிவுதாரர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட உளளது. இப்பணியிடங்களுக்கு பிளஸ் 2 கல்வித்தகுதியுடன் ஓராண்டு சான்றிதழ் Medical Lab Technology Course கல்வித்தகுதியினை மருத்துவத்துறையினரால் அங்கிகரிக்கப்பட்ட அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.மேற்கண்ட பணிக்காலியிடத்திற்கு வயதுவரம்பு 01.07.2019 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினருக்கு உச்ச வயதுவரம்பு இல்லை. பகிரங்கள் போட்டியாளர்களான (OC) பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு 30 ஆகும்.மேற்காணும் கல்வித்தகுதியுடைய திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் மட்டும் 11.11.2019 திங்கள்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, வட்டாட்சியர் (மேற்கு) அலுவலகத்திற்கு பின்பிறம், திருச்சிக்கு நேரில் அனைத்து கல்விச்சான்றிதழ்களுடன் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.