அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அசோக சக்ரா விருது பெற, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: துணிச்சல் அல்லது ஒப்புயர்வற்ற வீரதீர செயல்புரிந்து சுயதியாகம் செய்தவர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், பொதுமக்கள், வாழ்க்கையில் பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் உயர்ந்தவர்கள், காவல்படை, மத்திய காவல்படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகளில் வீரதீர செயல் புரிந்தவர்கள் தகுதியானவர்கள்.இந்த விருது, ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது. தகுதியான நபர்கள், தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி வரும், 5க்குள் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்