Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 4, 2019

சிறுநீரக பாதிப்பு ஏற்படுதற்கான அறிகுறிகள் என்ன...? சிறுநீரக பாதிப்பு ஏற்படும்


முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம். சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு.



உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது. சிறுநீரக பாதிப்பு என்றதும் அனைவருமே அதிக கவனம் செலுத்துவர். ஆனால் பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம். கீழ் முதுகு வலி என்றாலே சிறு நீரக பிரச்சினை என்று பொருள் அல்ல.
ஆனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது கீழ் முதுகு வலி ஒரு புறமோ அல்லது இரு புறமோ இருக்கும். சிறுநீர் சென்ற பின் வலி குறைவது போல் இருக்கும். சிறுநீர் வெளிர்த்தோ அல்லது மிக அடர்ந்தோ இருக்கும், மிகச்சிறிய அளவோ அல்லது மிக அதிக அளவிலோ சிறுநீர் வெளியாகும். சிறுநீர் ரத்தம் கலந்து இருக்கலாம்.



இத்தகைய மாறுதல்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். கை, பாதம், கால், கனுக்கால், முகம் இவற்றில் வீக்கம் இருந்தால் சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை சீராக வெளியேற்றவில்லை என கண்டு கொள்ளலாம். சீராக இயங்காத சிறுநீரகத்தினால் உடலில் வறட்சி, சரும பிடிப்பு, அரிப்பு ஆகியவை ஏற்படும்.