பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், எல்லை சாலை கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு..!


மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில், மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (Multi Skilled Worker) பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணிகள் & காலிப்பணியிடங்கள்:
மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (Multi Skilled Worker)

மொத்தம் = 540 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகப்பட்சமாக 25 வயது வரை இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி பிரிவினர் / EWS / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.50
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் பணபரிமாற்ற முறையில் SBI வங்கியின் https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=1232156 - என்ற இணையதள லிங்கில் சென்று தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Commandant,
GREF Centre,
Dighi Camp, Pune-411 015கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பத்தாம் வகுப்பில் தேர்ச்சியோ அல்லது மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் பணிகளுக்கேற்ப சான்றிதழ் படிப்பை பயின்று இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.bro.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Commandant, GREF Centre, Dighi camp, Pune- 411 015.தேர்வு செய்யும் முறை:
1. உடற்தகுதி தேர்வு
2. செய்முறைத் தேர்வு
3. எழுத்துத் தேர்வு
4. மருத்துவத் தகுதித் தேர்வு

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.bro.gov.in/WriteReadData/linkimages/1406325940-12.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.