அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கிளார்க் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 11

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
புரொபஷனல் அசிஸ்டெண்ட்
சிவில் பிரிவு - 01
எலெக்ட்ரிக்கல் பிரிவு - 2
கிளார்க் அசிஸ்டெண்ட் - 01
உதவியாளர், மின்பழுது நீக்குபவர் - 7

கல்வித் தகுதி மற்றும் ஊதியம்:

புரொபஷனல் அசிஸ்டெண்ட் III சிவில் பிரிவு மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிவில், எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.627 நாள் ஒன்றுக்கு

கிளார்க் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டைப்பிங், கம்ப்யூட்டர் அறிவு இருத்தல் அவசியம்.

ஊதியம் : ரூ.434 நாள் ஒன்றுக்கு

பியூன் மற்றும் எலெக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.412 நாள் ஒன்றுக்கு

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, வகுப்பு சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Professor & Estate Officer, Anna University, Chennai-600 025
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : நவம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.