அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்


பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் என 92 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 92

பணி: Assistant Security Officer (A)
காலியிடங்கள்: 19

பணி: Security Guard
காலியிடங்கள்: 73

வயதுவரம்பு: 06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32க்குள்ளுபம், ஓபிசி பிரிவினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.