எம்.டி., ஓமியோபதி படிப்பில் சேர வாய்ப்பு

சென்னை: வனக்காவலர் பணிக்கான, &'ஆன்லைன்&' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று உடல் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.தமிழகத்தில், 564 வனக்காவலர் பணிக்கான தேர்வு, அக்., 4, 5, 6ம் தேதிகளில் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், 1:3 என்ற விகிதத்தில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.இப்பணி, சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் நடந்து வருகிறது.அடுத்த கட்டமாக, உடல் திறன் தேர்வு, இன்று வண்டலுார் உயிரியல் பூங்காவில் நடக்க உள்ளது. காலை, 6:00 மணிக்கு துவங்கும், இத்தேர்வில், &'சிப்&' அடிப்படையிலான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.