புதிய பாடத்திட்டம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும்


'தினமலர்' நாளிதழ், நடத்திய 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் அவர் பேசியது:புதிய பாடத் திட்டத்தில் புத்தககங்களின் பக்கங்கள்தான் அதிகமே தவிர, கடினமானது அல்ல,புரிந்துகொண்டு படித்தால் மிகவும் எளிதானது. புதிய பாடத் திட்டம் சுயமாக சிந்தித்து, மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வகையில் அமைந்துள்ளது.
சுயமாக சிந்தித்தால் தான் மாணவர்கள் இன்றைய சூழலில் போட்டி தேர்வுகளை சமாளித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். நீட் தேர்வு உள்ளிட்ட எந்த போட்டி தேர்வுகளையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.படித்தோம் பாஸ் செய்தோம் என்றில்லாமல், கடினமாக உழைத்து படிக்க வேண்டும், புத்தகத்தை திரும்ப திரும்ப படிக்க வேண்டும், படித்ததை திரும்ப அசைபோட வேண்டும். அரசு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டதை உணர்ந்து, துாக்கத்தை கட்டுப்படுத்துங்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கலாம்.தேர்வின் போது படித்துக் கொள்ளலாம் என்றால் உங்களால் சாதிக்க முடியாது.
புதிய பாட திட்ட புத்தகங்களை முழுமையாக படித்து, முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ள தகவல் குறித்து நண்பர்களிடம் பேச வேண்டும்.காலையில் சீக்கிரம் எழுந்து படிக்கலாம்.பாடங்களை தேர்வு செய்து, எளிமையாக படித்தால் ஜெயித்துக் காட்ட முடியும். பிடித்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும். சரியான திட்டமிடல் உருவாக்கினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இவ்வாறு, அவர், பேசினார்.