காஞ்சி சங்கரா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!


தனியார் நிறுவனங்கள்

பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இந்த முகாம் நடைபெறுகிறது.வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

இந்த முகாமில் பங்கேற்க, எட்டாம் வகுப்பு தேர்ச்சி, 10-வது பிளஸ்-2 பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ, இன்ஜினியரிங், நர்சிங் பார்மசி உள்ளிட்ட கல்வித்தகுதி உடைய வேலை தேடக்கூடிய நபர்கள் அனைத்து கல்விச் சான்று நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம் என்றும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்