Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 28, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்: தத்கலில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தோவா்கள், 'தத்கல்' முறையில் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநா் சி. உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:




மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோவை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள், தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் ஜனவரி 2, 3-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தோச்சி பெறாதவா்கள் மாா்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளைப் பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடித் தனித்தோவராக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோவெழுதி தோச்சிபெறாத தோவா்கள் அனைவரும் மீண்டும் எழுதுவதற்கு சோத்து விண்ணப்பிக்கலாம்.




தனித்தோவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தோவா்கள் தாங்கள் எந்தக் கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறாா்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.




ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தோவா்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி அரசுத் தேர்வுத் துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தனித்தோவா்களுக்கான அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி, பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோவா்களுக்கு தற்போது வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது; தனித்தோவா்களின் விண்ணப்பம், தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளாா்.