Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 4, 2019

நீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்!!


வங்கிகள் திவால் ஆனாலோ அல்லது தோல்வி அடைந்து கலைக்கப்பட்டாலோ அந்த வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும் வைப்புத் தொகையாளர்களுக்கு ரூ.ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டி.ஐ.சி.ஜி.சி) தெரிவித்துள்ளது.




வங்கிகளில் பிக்சட் டெபாசிட், சேமிப்பு கணக்கில் போடப்பட்ட பணம், கரண்ட் அக்கவுண்ட் மற்றும் பிற கணக்குகளில் போடப்பட்டுள்ள பணத்திற்கான காப்பீடுகள் விவரம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடம் (DICGC), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு பதில் அளித்த அந்த நிறுவனம் "டி.ஐ.சி.ஜி.சி சட்டம், 1961 இன் பிரிவு 16 (1) இன் விதிகளின் கீழ், ஒரு வங்கி தோல்வியுற்றால் / கலைக்கப்பட்டால், டி.ஐ.சி.ஜி.சி ஒவ்வொரு வைப்புத்தொகையாளருக்கும் பணத்தை பிரித்து செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.




ஒருவர் வங்கியின் அனைத்து கிளைகளிலும் சேர்ந்து வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டிக்தொகைக்கு காப்பீடு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.