Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 6, 2019

10 & +2 மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மோடியின் புதிய திட்டம்..!

பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி: பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக மாணவர்களை மாற்ற அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி திட்டம் 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.



இந்த திட்டத்தின் படி தேர்வுக்கு மாணவர்களின் தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு தேர்வுகள் அற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி (Pariksha pe charcha) திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.



2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு தேர்வுகளுக்கு பதிலாக தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தேர்வற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்