வேறு மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தின் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்.!!


சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ பதினோராம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
2017 மற்றும் 2018 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நேரடித் தேர்வு தேர்வர்கள், தனித்தேர்வர்கள் பதினோராம் வகுப்பு தேர்வு எழுதிய பின்னரே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது