12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு!


மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டு தோறும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வு (சிஜிஎல்) மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மேல்நிலை பள்ளிப்படிப்பு நிலை தேர்வு (சிஹெச்எஸ்எல்) தேர்வு நடத்தப்படும்.

தற்போது சிஹெச்எஸ்எல் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் அஞ்சல் உதவியாளர், முதல்நிலை கிளார்க், இளநிலை உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தப்படுவர்.
நிர்வாகம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)

பணிகள் :

அஞ்சல் உதவியாளர், முதல்நிலை கிளார்க், இளநிலை உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :
இளநிலை பிரிவு உதவியாளர் (LDC) மற்றும் இளநிலை செயலக உதவியாளர் உதவியாளர் : ரூ. 19,900 முதல் ரூ.63,200 வரையில்
அஞ்சலக உதவியாளர் மற்றும் சார்ட்டிங் உதவியாளர் : ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரையில்
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (DEO) - ரூ.25,000 முதல் ரூ. 81,000 வரையில்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் - டிசம்பர் 3
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜனவரி 10, 2020
ஆன்லைன் முறையில் பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் - ஜனவரி 12, 2020
வங்கியில் சலான் மூலம் பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் - ஜனவரி 14, 2020
தேர்வு தேதிகள்:
முதல்நிலைத் தேர்வு தேதி - 2020 மார்ச் 16 முதல் 20-ம் தேதி வரையில்
இரண்டாம் நிலைத் தேர்வு தேதி - 2020 ஜூன் 28-ம் தேதியன்று நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in/Portal/Apply என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவமானது பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என இரு பகுதியாக இருக்கும். இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://ssc.nic.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதள முகவரியினைக் காணவும்.