காஞ்சிபுரத்தில் டிச.13,14 தேதிகளிலும் கேங்க்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு


காஞ்சிபுரத்தில் மழை காரணமாக இம்மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கேங்க்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு வரும் 13,14 தேதிகளில் நடைபெறும் என மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் கேங்க் மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு இம்மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் 2,3 ஆகிய தேதிகளில் மழை காரணமாக கேங்க்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு தேதி குறிப்பிடாமல் பின்னா் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் 4 ஆம் தேதியிலிருந்து கேங்க்மேன் பணிக்கான உடற்தகுதித் தேர்வு காஞ்சிபுரத்தில் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
மழை காரணமாக இம்மாதம் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த கேங்க்மேன் பணிக்கான தேர்வு வரும் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் மேலும் விபரங்களுக்கு இணையதளத்தைப் பாா்க்குமாறும் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.