மாதம் 15 ஜிபி இலவச டேட்டா, முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!


வைபை வழியாக டெல்லி வாழ் மக்களுக்கு இலவசமாக இணையதள வசதி வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, அந்த தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அம் மாநிலமுதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இலவசத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் இலவச இணையதள திட்டத்தை தொடங்கி வைத்தார், இத்திட்டத்தின்படி மாதந்தோறும் டெல்லி மக்களுக்கு 15 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்தத்திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும் என தெரிவித்த அவர், டெல்லியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்களில் 4000 ஹாட் ஸ்பாட்டுகளும், சந்தை பகுதிகளில் 7000 ஹாட்ஸ்பாட்களும் அமைக்கப்படும் என்றார். வரும் 16-ம் தேதி முதல்கட்டமாக 100 ஹாட்ஸ்பாட்டுகள் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு சுமார் ரூ .100 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.