Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 16, 2019

வரலாற்றில் இன்று 16.12.2019

டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1431 – இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
1497 – வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
1598 – கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
1653 – சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.
1707 – ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் – அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
1835 – நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
1857 – இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.
1920 – சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.




1922 – போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1925 – இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
1960 – ஐக்கிய அமெரிக்க விமானம் நியூ யோர்க்கை அண்மிக்கும் போது மோதியதில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
1971 – பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1991 – கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

1770 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)
1866 – வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (இ. 1944)
1917 – ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில எழுத்தாளர்
1930 – லலிதா – திரைப்பட நடிகை (திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர் (பத்மினி, ராகினி) (இ. 1982)
1933 – அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (இ. 2014)




இறப்புகள்

1916 – கிரிகோறி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு, (பி. 1869)
1999 – ஜோசப் ஆனந்தன், தமிழ் நாடக எழுத்தாளர்

சிறப்பு நாள்

பாஹ்ரேன் – தேசிய நாள் (1971)
வங்காள தேசம் – வெற்றி நாள் (1971)
கசக்ஸ்தான் – விடுதலை நாள் (1991)
நேபாளம் – அரசியலமைப்பு சட்ட நாள் (1962)