உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் வகுப்புக்கு வராத ஆசிரியர்களுக்கு - 17 A - விளக்கம் கேட்டு நோட்டீஸ்!! Proceedings

அலுவலர்களுக்கு 15.12.2019 அன்று முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது - வருகை புரியாத அலுவலர்களின் உரிய விளக்கம் பெற்று அனுப்ப கோருதல் - தொடர்புடைய பயிற்சியாளர்கள் 18.12.2019 அன்று பயிற்சிக்கு கட்டாயம் வருகை புரிதல் - சார்பாக
பார்வை... சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கடித ந.க.எண்.5650/2019/ஊ.தே1 நாள் 16.12.2019
மேற்காண் பார்வையில் கண்டுள்ள கடிதத்தின் படி தேர்தல் பயிற்சி வகுப்பு தொடர்பான அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சார்வு செய்யப்பட்டு முதல் கட்ட தேர்தல் பயிற்சி 15.12.2019 அன்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட அளவில் 2170 பயிற்சியாளர்கள் வருகை புரியவில்லை எனவும், பயிற்சிக்கு வருகை புரியாத அலுவலர்கள் விளக்கத்தினைப் பெற்று அனுப்பவும் அந்த அலுவலர்கள் 18.12.2019 அன்று காலை 10.00 மணிக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆஜர்படுத்தவும்
சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இணைப்பில் கண்டுள்ள தேர்தல் பயிற்சிக்கு வருகை புரியாத வாக்குச்சாவடி தலைமை
அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய விளக்கத்தினை சம்பந்தப்பட்ட வட்டாரக்
கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (17.12.2019) அன்று
தெரிவித்து, புதன்கிழமை (18.12.2019) அன்று காலை 10.00 மணிக்கு இணைப்பில் கண்டுள்ள படிவத்தில்
தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தங்களுடைய வருகையை பதிவு
செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இணைப்பில் கண்டுள்ள தேர்தல் பயிற்சிக்கு வருகை புரியாத ஆசிரியர்களிடம் நாளை செவ்வாய்க்கிழமை (17.12.2019)
உரிய விளக்கத்தினை பெற்று அதனைத் தொகுத்து மாலைக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில்
சமர்ப்பித்திடவும், புதன்கிழமை (18.12.2019) அன்று காலை 10.00 மணிக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் அவர்களுடைய வருகையை பதிவு செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத்
தெரிவிக்கப்படுகிறது.