சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023... உத்தியோகத்தில் ஜாக்பாட்... இந்த ராசிக்காரர்களுக்கு தான்!


மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனிதேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
எல்லா உயிர்களையும் ஒன்றாக எண்ணி தர்ம நீதிகளுக்கு கட்டுப்பட்டு உயிர்களை தேவ மற்றும் நரக லோகத்திற்கு அழைத்து செல்லும் எமதர்மராஜாவின் சகோதரன் என்பதுடன், உலகிற்கு ஒளி அளித்து இருளை நீக்கி வரும் உலகில் பிறந்த அனைத்து உயிர்களின் ஆத்ம காரகன் என அழைக்கப்படும் சூரிய பகவானின் புதல்வன் நம் 'சனிபகவான்" ஆவார்.
நீலன், காரி, நோய்முகன், முதுமுகன், மந்தன், முடவன், அந்தன், சாவகன் மற்றும் கீழ் மகன் போன்ற பெயர்களுக்கு உரியவர் சனிபகவான். பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி. மகரம் மற்றும் கும்பம் இவரின் வீடுகள் என ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.
நவகிரகங்களில் நம் கர்மவினைக்கு ஏற்ப தன் தசா காலங்களில் அதற்கான பலன்களை அளிக்கக்கூடிய நீதிமான் என எல்லோராலும் அழைக்கப்படுபவர் சனிபகவான் ஆவார். அவர் கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்க முடியாது. கெடுக்க நினைத்தாலும் எவராலும் தடுக்க இயலாது.
நம் செய்யும் பணிகளில் இன்று இருக்கும் நிலையை காட்டிலும், இதற்கு அடுத்த நிலையான மேல்மட்ட நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணமும், செயல்பாடுகளும் அனைவரிடத்திலும் இருக்கும். அதற்காக நாம் பல முயற்சிகள் செய்து கொண்டு இருக்கின்றோம்.
செய்யும் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உள்ளதா? இல்லையா? என்பதை நமது ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளும், கோச்சாரத்தில் அந்த கிரகங்களின் வலிமைக்கு ஏற்ப தான் அமையும். அந்த வகையில் வருகின்ற சனிப்பெயர்ச்சியில் உயர்பதவி பெறும் ராசிகள் எது?... என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
ரிஷபம்
சிம்மம்
கன்னி
விருச்சிகம்
மீனம்


அவரவர்களுக்கு நடக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப பதவியில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.