Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 4, 2019

+2 தேர்ச்சி பெற்றவரா? தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை ஆய்வாளர் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 583 கால்நடை ஆய்வாளர் நிலை II பதவிக்கான பயிற்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

கால்நடை ஆய்வாளர் நிலை II : 583 காலிப்பணியிடங்கள்

பயிற்சி : 11 மாதங்கள், 11 மாத கால பயிற்சி முடித்த பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை II-க்கான பணி ஆணை வழங்கப்படும்.




சம்பளம் :
பயிற்சியின் போது எந்தவிதமான ஊதியமோ, உதவித் தொகையோ வழங்கப்படமாட்டாது.

கல்வித் தகுதி :

12வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.07.2019 அன்றைய தேதியின் படி

SC/SC(A), ST பிரிவை சார்ந்தவங்க 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
MBC, BC, BCM பிரிவை சார்ந்தவங்க 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
General பிரிவை சார்ந்தவங்க 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

SC,SC(A),ST, MBC, BC, BCM - பட்டப்படிப்பு தேர்வு பெற்றிருப்பின் அதிகபட்சம் 46 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம் : ரூ. 100




SC/ST, மாற்று திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணத்தை வரவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். வரவோலை "இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், சென்னை - 35" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cms.tn.gov.in/sites/default/files/job/LI_notification_021219.pdf தறவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cms.tn.gov.in/sites/default/files/job/LI_notification_021219.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.




விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

இயக்குநர்,
காலிநடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்
எண். 571, அண்ணாசாலை
சென்னை -35

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019 மாலை 5.45 மணி வரை