30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - விவரம் கேட்டு அறிக்கை வெளியீடு

30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு பெறவுள்ள ஊழியர்களின் விவரம் கேட்டு வேலைவாய்ப்பு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு.
31.03.2020. அன்று 30 ஆண்டுகள் பணிபுரிந்தோர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அவர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளன்று கட்டாய ஓய்வு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகள் பணி காலம் முடிக்கப்பெற்றவர்கள் அல்லது 50/55 வயது அடைந்த பணியாளர்கள்/ ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 31.03.2020 அன்று வெளியிடப்பட உள்ளது. பட்டியலில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வேலை நாளன்று விருப்ப ஓய்வு வழங்க அரசு முடிவு.