மருத்துவ மேற்படிப்புக்கு ஜனவரி, 5ல், நீட் தேர்வு


நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலையில், எம்.டி., - எம்.எஸ்., என்ற மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு, 30 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் உள்ளன. தமிழகத்தில், 4,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், &'நீட்&' தேர்வில் தகுதி பெறும், எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள் வாயிலாக நிரப்பப்படுகின்றன.தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும், 2020 - 21க்கான மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வுக்கு, www.nbe.edu.in என்ற இணையதளத்தில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், நாடு முழுவதும், ஜனவரி, 5ல், நீட் தேர்வு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட, நாடு முழுவதும், 162 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், ஜன., 31ல் வெளியிடப்பட உள்ளன.