எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவசப்பயிற்சி: டிச.7-இல் நுழைவுத் தேர்வு

எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவசப் பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.) மத்தியப் பணியாளர் தேர்வா ணயம் 9276 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை வருகிற மார்ச் மாதம் நடத்தவுள் இத் தேர்வை எழுத விரும்புவோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பேருக்கு ஃபோக்கஸ் கல்வி அறக்கட்டளை இலவசமாக பயிற்சி அளிக்கவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.பட்டப்படிப்பு முடித்த 30 வயதுக்குட்பட்டோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச்சான்று, கல்விச்சான்றுகளுடன் focuseducationaltrust1996@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக் கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மார்ச் மாதம் வரை, வார இறுதி வகுப்புகளாக சென்னையில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 7010136605,8248951454 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.