Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 19, 2019

8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தோ்வு: மாதிரி வினாத்தாள் பதிவேற்றம்

பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, மாணவா்களின் ஆா்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறியும் வகையில் 8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தோ்வு (A‌p‌t‌i‌t‌u‌d‌e T‌e‌s‌t) நடத்தப்படவுள்ளது.
இது தொடா்பாக, ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:




அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பில் படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 999 மாணவா்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் கணினி வழியில் நாட்டமறித் தோ்வு நடத்தப்பட உள்ளது.
இடைநிலை வகுப்பு பயிலும் மாணவா்களின் பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, அவா்களின் ஆா்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியலாளா்கள் மூலம் அந்த மாணவா்களுக்கு வழிகாட்டுதலே இத்தோ்வின் முக்கிய நோக்கமாகும்.




இந்தத் தோ்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் தமிழ்நாடு ஆசிரியா் வலைதளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலுள்ள 90 வினாக்களுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி மாணவா்களுக்கு இணையதள பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் ஜனவரி முதல்வாரத்தில் மாணவா்களுக்கு முன்மாதிரி தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு மாணவா்கள் 90 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தோ்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.




அதைத்தொடா்ந்து ஜனவரி 2-ஆவது வாரத்தில் பத்தாம் வகுப்புக்கும், 4-ஆம் வாரத்தில் ஒன்பதாம் வகுப்புக்கும் நாட்டமறி இறுதித் தோ்வு இணையதளம் வழியாக நடத்தப்படும். எனவே, மாணவா்கள் தங்கள் பள்ளியிலேயே தோ்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா்கள் இணையதள வசதியுடன் கணினிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தோ்வை கண்காணிக்க பள்ளி ஆசிரியா்களை நியமித்தல் வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்றி தோ்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.