Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 5, 2019

9 மாவட்டங்கள் தவிர்த்து தேர்தல் நடத்தலாம் - உச்ச நீதிமன்றம்!!

மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் எனவும், உச்சநீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.





இதனையடுத்து 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடவடிக்கை முறைகளை நிறைவேற்ற தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. மேலும், தொகுதி மறுவரை பணிகள் நிறைவடையாததால் அறிவிக்கப்பட்ட கிராம ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (டிச.,05) விசாரணைக்கு வந்தது.




திமுக சார்பில், உள்ளாட்சசி தேர்தல் நடந்து நிர்வாகிகள் வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம், ஆனால் நியாயமான முறையில் நடைபெறவேண்டும். மறுவரை செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது என வாதிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது, என பதிலளித்தது. பதிலளிக்க உத்தரவு தமிழக அரசு சார்பிலான வாதுரையில், தொகுதி மறுவரையறை செய்யவில்லை என நினைத்தால் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வையுங்கள்.




தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் நீதிமன்றத்தால் தேர்தலை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு தமிழக அரசு வாதிட்டது. பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவு: பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சி தேர்தலில் குழப்பம் வராதா. தேர்தலை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது ஆனால் முறையான விதிகள் பின்பற்றவில்லை எனில் தள்ளி வைக்க முடியும். இந்த வழக்கு தொடர்பாக மதியம் 2 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.



இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளோம். மற்ற மாவட்டங்களில்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், தீர்ப்பை தள்ளி வைத்தனர்.