எந்தெந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது தெரியுமா?


ஜனவரி 1, 2020 முதல் விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இயங்காது. உலகம் முழுக்க சுமார் 150 கோடிக்கு அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இந்த செயலியை சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 1 முதல் விண்டோஸ் போன் தவிர ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.3.7 பதிப்பு, ஐ.ஒ.எஸ். 8 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை பிப்ரவரி 1, 2020 முதல் பயன்படுத்த முடியாது.
சேவை நிறுத்தப்படும் பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து விண்டோஸ் போன் தளத்தில் பயன்படுத்த முடியும். எனினும், செயலிக்கான அப்டேட் மற்றும் பாதுகாப்பு பிழை எதுவும் சரி செய்யப்பட மாட்டாது. இந்த இயங்குதளங்களுக்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால், இவற்றில் உள்ள அம்சங்கள் எப்போது வேண்டுமானாலும் இயங்காமால் போகலாம்,” என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.