Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 3, 2019

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூவர் பட்டு கைத்தறி நெசவாளர் சங்கங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




நிறுவனம்: தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை

மொத்த காலியிடங்கள்: 34

பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Computer Operator - 02
சம்பளம்: மாதம் ரூ.4,500 - 27,530 + தர ஊதியம் ரூ.1,100

பணி: Designer - 02
சம்பளம்: மாதம் ரூ.5,800 - 32,970 + தர ஊதியம் ரூ.1,500

பணி: Typist - 02
பணி: Loom Supervisor - 02
சம்பளம்: மாதம் ரூ.4,900- 27,800 + தர ஊதியம் ரூ.1,200

பணி: Office Assistant - 02
பணி: Adai Maker - 03
பணி: Junior Clerk - 08
பணி: Salesman/Saleswoman Grade II - 13
சம்பளம்: மாதம் ரூ.4,000 - 19,360 + தர ஊதியம் ரூ.900




வயதுவரம்பு: 0 1.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 35 வயதிற்குள்ள இருக்க வேண்டும்.


தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து முழுமையாக தெரிந்துகொள்ளவும். 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு தகுதி மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருப்பவர்கள், டிசைனர் பிரிவில் டிப்ளமோ மற்றும் கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கைத்தறி மற்றும் துணிநூல் துறை, துணை இயக்குநர் அலுவலகம், 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, ஒரிக்கை காஞ்சிபுரம் - 631501

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2019