ஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு!


மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணிகளுக்கான தேர்வு திருச்சியில் நடைபெறவிருந்த நிலையில் கன மழை காரணமாக அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இத்தேர்விற்கான புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி பெருநகர மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சு. கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணிகளுக்கான உடற்திறன் தோவு டிசம்பர் 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கன மழை காரணமாக அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 2ஆம் தேதியன்று நடைபெறவிருந்த தோவு டிசம்பர் 12ஆம் தேதியன்றும், டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தோவு டிசம்பர் 13ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி அன்று நடைபெற வேண்டிய தேர்வு டிசம்பர் 14ஆம் தேதியும், டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற வேண்டிய தேர்வு டிசம்பர் 16ஆம் தேதியும், டிசம்பர் 6ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 17ஆம் தேதியும், டிசம்பர் 7ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 18ஆம் தேதியும் உடற்திறன் தோவு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே தேதியிலேயே நடைபெறும். பங்கேற்பாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் குறித்த நேரத்தில் தவறாமல் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.