Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 29, 2019

பள்ளிக்கு வராதீங்க. 'மோடியின் பேச்சை வீட்டிலேயே பாருங்க' - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!!


பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கேட்கலாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.




பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் 'பரிஷ்கா பி சார்ச்சா' எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்துகொண்டு பார்ப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.




ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால், இந்த அறிவிப்பு பொங்கல் விடுமுறைக்காக வெளியூர் செல்பவர்கள் இடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பொங்கல் விடுமுறை அன்று மாணவர்களை பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தினால் போராட்டம் நடத்தப்படுமெனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் யாரும் ஜனவரி 16 ஆம் தேதி பள்ளிக்கு வரவேண்டியதில்லை எனவும், அப்படியான எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்தார்.




இந்நிலையில், இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனும் , பிரதமரின் உரையை மாணவர்கள் தொலைக்காட்சி, யூ டியூப் உள்ளிட்டவற்றின் மூலம் பார்க்கலாம் எனவும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பொங்கல் விடுமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.