Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 19, 2019

கல்விக்கும் சோதனை - தினகரன் தலையங்கம்!






தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி பள்ளிக்கல் வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது . ஏழை , எளிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் வரிப்பணம் கல்வித்துறைக்கு அளிக்கப்படுகிறது . ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன ? . தனியார் கல்வி நிறுவனங்கள் வளம் கொழிக்கும் நிலையில் அரசு பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன . பள்ளிகளை மட்டுமல்ல ஆசிரியர்களையும் இந்த அரசு விட்டு வைக்க வில்லை . உபரி என்று கணக்கெடுக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 109 பட்டதாரி ஆசிரியர்களில் 2600 ஆசிரியர்களை பணியிறக்கம் செய்து தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் பணி நிரவல் செய்ய முடிவு செய்து அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது . 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு மட்டும் இவர்கள் பாடம் எடுக்க அனுமதிக் கப்படுவார்கள் , ஊதியம் மற்றும் பணிநிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று உத்தரவாதம் வேறு அளித்திருக்கிறது அரசு . பட்டதாரி ஆசிரி யர்கள் என்று தேர்வு செய்து விட்டு தொடக்கப்பள்ளிகளுக்கு அவர்களை அனுப்பும் அவசியம் இந்த அரசுக்கு ஏன் வந்தது ?




காமராஜர் ஆட்சிக் காலத்தில் , பள்ளி செல்லும் குழந்தைகளை விட , செல்லாதவர்கள் அதிகம் . காரணம் போதுமான பள்ளிகள் இல்லை . கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் . 3 கிலோ மீட்டர்துாரத்திற்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் . அங்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று கல்வியை தமிழகத்தில் கால் ஊன்ற செய்தவர் காமராஜர் . பின்னர் எம்ஜி . ஆர் ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது . இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் கூட தனியார் பள்ளிகள் தோன்றிவிட்டன . இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் சரிவை சந்தித்து வருகின்றன . இந்த கல்வியாண்டில் 1531 அரசு பள்ளிகள் வெறும் 10 மாணவர்களுடன் செயல்பட்டு வருகி றது . விருதுநகர் , கரூர் , திண்டுக்கல் , கிருஷ்ண கிரி , மதுரை , நாமக்கல் , சிவகங்கை மாவட்டங்க ளில் தலா 3 பள்ளிகளிலும் , நீலகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை , வேலூர் மாவட்டங்களில் 4 பள்ளிகளிலும் ஒரு மாணவர்கள் கூட இல்லை . ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் ஒருமாணவர் கூட சேராத 50 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட உள்ளன .




பள்ளிக்கல்வித்துறையை மறுசீரமைப்பு செய்வதற்கும் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை . பட்ஜெட் நிதியை கொண்டு கல்வித் துறை கட்டமைப்பை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை . ஆனால் இந்த கல்வியாண்டில் 1 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்துவிட்டார்கள் என்று பெருமை பாராட்டுகிறது பள்ளிகல்வித்துறை . ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் 4 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலைக்கு வந்திருப்பதை கண்டுகொள்ளவில்லை . இப்படியே சென்றால் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனியே ஒரு துறை தமிழகத்திற்கு தேவைப்படாத சூழல் உருவாகலாம்