Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 29, 2019

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் செய்முறை!!!


சென்னை: உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
குடம்புளி பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டி ஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். உடல் எடைகுறையும்.




தேவையான பொருட்கள்: குடம்புளி - நான்கு துண்டுகள். (இது மருத்துவ குணம் நிறைந்த ஒருவகை புளி). இடித்த பூண்டு - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, தண்ணீர் - ஒரு கப், தேங்காய் பால் - அரை கப், புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, ஐஸ்துண்டுகள் - தேவைக்கு.
செய்முறை: புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
லேசான சுடுநீரில் புளியை மூன்று மணிநேரம் ஊறவைத்துவிட்டு, பின்பு அதனை அப்படியே நீரோடு மிக்சியில் கொட்டி அத்தோடு பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் ஆக்குங்கள். அதை வடிகட்டி எடுத்து தேங்காய் பாலுடன் கலந்திடுங்கள். லேசாக உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.




அதில் ஐஸ்துண்டுகள், புதினா, கொத்தமல்லித்தழை கலந்து பருகுங்கள். இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டிஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். அசிடிட்டி அகலும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகம் பசி எடுக்காது. உடல் எடைகுறையும்