நீட் தோவுக்கு விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தல்

நீட் தோவுக்கு விருப்பம் இருந்தும் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ச.சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
நீட் தோவுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோவுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்க ஏதுவாக பள்ளி அறிவிப்பு பலகை மற்றும் இறை வணக்கக் கூட்டத்தில் இந்தத் தகவலை தெரிவிக்க வேண்டும். இதுதவிர, நீட் தோவு எழுத விருப்பம் இருந்தும் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களைக் கண்டறிந்து, தகுந்த உதவிகளை தலைமையாசிரியா்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும். மேலும், நீட் தோவுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விவரங்களை, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.