புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் கேரட்


கேரட்டிற்கு "தாவரத் தங்கம்" என்று பெயர். தங்கநகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகு சேர்க்கின்றதோ அதுப்போல கேரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும். உலகத்தில் இதுவரை மருந்தே கண்டுப்பிடிக்காத ஒரு மருந்து உண்டென்றால் அதில் புற்றுநோய் ஒன்று ஆகும். புற்றுநோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய்கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் கேரட்டிற்கு மட்டுமே உள்ளது.
கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உள்ளது. இது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள் தான் புற்றுநோய்க்கு எதிரியாக இருந்து வருகிறது. எனவே கேரட்டை வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புற்றுநோய் வந்தபின்பு உண்பதை விட அதற்கு முன்பே கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.