டான்செட் தேர்வு அறிவிப்பு


அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, &'டான்செட்&' என்ற, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர, இந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை வழியாக நடத்தப்படுகிறது.வரும் கல்வி ஆண்டில், இந்த முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, பிப்ரவரி, 29 மற்றும் மார்ச், 1ல், டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இதற்கான, &'ஆன்லைன்&' விண்ணப்ப பதிவு, ஜன., 7ல் துவங்குகிறது; 31ல் முடிகிறது. பிப்., 13ல், &'ஹால் டிக்கெட்&' வெளியிடப்படுகிறது. மார்ச், 20ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மார்ச், 23ல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, டான்செட் கமிட்டி அறிவித்துள்ளது.